கஸ்தூரிக்கு டார்ச்சர் கொடுத்தது தெலுங்கு ஹீரோவாம்!

சினிபிட்ஸ்:

ஒரு காலத்தில் பிரபல ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. பிறகு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தனது மகள் பரதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சமீபத்தில் சென்னை வந்தார் கஸ்தூரி. இந்த நிலையில், வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “நான் திரையுலகில் ஹீரோயினாக வலம் வந்தபோது ஒரு ஹீரோ தொடர்ந்து என்னை பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தார். அதற்காக மிகவும் டார்ச்சர் கொடுத்தார். என்னை இரு படங்களில் இருந்து நீக்கவும் செய்தார்” என்று பரபரப்பான குற்றச்சாட்டை வீசினார்.

மேலும், “அந்த ஹீரோ, ஒரு அரசியல் பிரமுகர்.. வாரிசு நடிகர்” என்றும் தெரிவித்தார். இதையடுத்து அந்த அரசியல் நடிகர் யார் என்ற சமூகவலைதளங்களில் பலரும் தங்கள் யூகங்களை பதிவிட ஆரம்பித்தனர். தமிழில் முன்னணி நடிகர்கள் பலர் வாரிசுகள்தான்.. அரசியல் பின்புலமும் கொண்டவர்கள்தான்.

ஆகவே பலரது பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில், பிரபல ஆங்கில சேனல் ஒன்று, “கஸ்தூரி குறிப்பிட்டது தமிழ் நடிகர் எவரையும் அல்ல. தெலுங்கு ஹீரோ ஒருவரைப்பற்றியே அவர் தெரிவித்தார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கு பட உலகில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.