முட்டுக்காடு அருகே நடிகை குஷ்பு கைது – வீடியோ

முட்டுக்காடு

திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

மனு ஸ்மிருதி குறித்து ஆட்சேபகரமான கருத்துக்களைக் கூறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவரை எதிர்த்தும் மற்றும் ஆதரித்தும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இன்று திருமாவளவன் தொகுதியான சிதம்பரத்தில் அவரை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்த உள்ளது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சமீபத்தில் பாஜகவில் இணைந்த பிரபல நடிகை குஷ்பு காரில் சென்று கொண்டிருந்தார்.

அவரை முட்டுக்காடு அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

இந்த செய்தி வலைதளங்களில் வைரலாகி வருகிறது