Random image

பிரபல நடிகை கணவரிடமிருந்து விவாகரத்து.. 8 வயது குழந்தையை வளர்ப்பது யார்?

கிரா, தல்வர், ஷஜருர் கன்டா, போன்ற இந்தி மற்றும் வங்காள மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் கொன்கொனா சென் ஷர்மா, மிஸ்டர் அண்ட் மிஸரஸ் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வென்றிருக் கிறார். கடந்த 2010 ஆம் ஆடு ரன்வீர் ஷோரி என்பவரை மணந்தார். இவர்க ளுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.


கடந்த சில வருடங்களாகவே ரன்வீருக் கும் கொன்கொனாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. 2015ம் ஆண்டி லிருந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்ற தகவல் சில வாரங் களுக்கு முன் வந்தபோது அதை ஒப்புக் கொண்ட கொன்கொனா, ’இருவரும் பிரிந்து வாழ்வது உண்மைதான். சட்டப் படி விவாகரத்துக்கு காத்திருக்கிறோம். நாங்கள் பிரிந்தாலும் நண்பர்களாக இருப் போம்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொங்கனாவுக்கு சட்டப் படி விவாகரத்து கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் அவர்களது மகன் இருவரிடமும் மாறி மாறி இருக்கலாம் என்று கூறபட்டிருகிறது. ’எங்கள் மகனை இருவரும் இணைந்து வளர்ப்போம்’ என தெரிவித்திருக்கிறார் கொன்கொனா.