ஆண் தோற்றத்துக்கு மாறிய குஷ்பு.. ஏன் இந்த விபரீத ஆசை..

90களின் கனவு கன்னி குஷ்புவுக்கு ரசிகர் ஒருவர் கோயிலே கட்டினார். அந்தளவுக்கு அவரது நடிப்பு, நடனம் என இருந்ததுடன் கொள்ளை அழகுடன் ரசிகர்களை வசீகரித்தார்.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு குஷ்பு வுக்கு ஆண் ஆக வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. அதற்கு ஃபேஸ் ஆப் செயலி கைகொடுத்தது. அந்த செயலி யில் தனது முக தோற்றத்தை ஆணாக மாற்றி டிவிட்டரில் வெளியிட்டிருக் கிறார்.
கிராப் கட்டிங், புருவத்தில் லேசான வெட்டு, மீசை மழித்த தோற்றம் என ஒரு மார்க்கமாக இருக்கிறார்.


யாருமே குஷ்புவை இப்படி கற்பனை செய்து பார்க்காத நிலையில் அவருக்கு இப்படியொரு விபரீத கற்பனை ஏன் வந்ததோ தெரியவில்லை. ரசிகர்கள் படத்தை பார்த்து தங்கள் இஷ்டத்துக்கு கமென்ட் பகிர்ந்தாலும் அதற்கு முன்பாக குஷ்புவே தனது படத்துக்கு கமென்ட் பகிர்ந்திருக்கிறார். அதில், ’ஒருவேளை நான் ஆணாக பிறந்திருந் தால்கூட அசிங்கமாக இருந்திருக்க மாட்டேன்’ என தனது அழகை தானே வர்ணித்திருக்கிறார்.
அரசியலில் ஒருபக்கம் பிஸியாக இருந் தாலும் திரைத்துறை மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார் குஷ்பு. தற்போது ரஜினியுடன் ’அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் குஷ்பு. இப்படத்தில் நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா டைரக்டு