டுவிட்டரில் கலாய்த்ததால் பொறுமையை இழந்த குஷ்பூ!

நடிகை குஷ்பு

பொதுவாக ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக இருந்தவர்கள் வயதானவுடன் வெள்ளித்திரையிலிருந்து, சின்னத்திரைக்கு வந்து விடுகின்றார்கள். சிலர் திருமணம் செய்துக்கொண்டு தனது குடும்பத்துடன் இருந்து விடுகின்றார்கள். அப்படி வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்தவர் தான் நடிகை குஷ்பு, இவர் இப்போது சன் டீவியில் நிஜங்கள் என்ற டாக் ஷோவை நடத்தி வருகின்றார்.

சில நாட்களுக்கு முன் அந்த நிகழ்ச்சியின் புரோமோவை பார்த்த சிலர் அவரை டுவிட்டரில் கலாய்த்து தள்ளினார்கள் அதை பார்த்த குஷ்பு ஆத்திரம் தாங்காமல் அவர்களுக்கு இனையாக சண்டை போட ஆரம்பித்தார்.

இதே போல சென்ற மாதம் லட்சிமி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சியை திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷும், ஆர்.ஜே.பாலாஜியும் கலாய்த்ததால் கடுப்பாகி என்னை ஒட்டுவதால் உங்களுக்கு என்ன சந்தோஷம் என்று கூறி என்னுடைய அனைத்து சமூக வலைதளத்திலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துவிட்டு சென்றுவிட்டார்.

இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு சில நடிகைகளே எதிர்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.