தமன்னாவுடன் லவ், லாவண்யாவுடன் டும் டும்: புருடா ஆசாமிக்கு காப்பு..

யூடியூபில் பிரபலமாகவேண்டும் என்பதற்காக தங்களால் முடிந்ததை செய்கின்றனர். ஒரு சிலர் தங்களால் முடியாதை செய்து வாங்கிக்கட்டிக் கொள்கின்றனர். தெலுங்கு யூடியூபில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக ஸ்ரீராமோஜு சுனிஷித்தை என்ற நபர் தனக்கு தமன்னாவுடன் லவ் இருந்தது பிறகு பிரேக் அப் ஆகிவிட்டது ஆனால் லாவண்யா திரிபாதியுடன் திருமணம் ஆகிவிட்டது 3 முறை அவர் கருக்கலைப்பு செய்துவிட்டார் என அளந்துவிட்டார். இது ரசிகர்களை மட்டுமல்லாமல் நடிகை களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இது குறித்து லாவண்யா போலீசில் புகார் அளித்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார், புகாரை பெற்ற போலீஸார் , யாருப்பா அந்த அப்பா டக்கர் என்று தோண்டித் துருவி விசாரித்தனர். அதில் ஸ்ரீராமோஜு சுனிஷித் என்பவர் சிக்கினார். அவருக்கு போலீஸார் கையில் விலங்கு போட்டனர் அவர் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பாகுபலி நடிகர் பிரபாஸ் மற்றும் மகேஷ்பாபு போன்ற வர்கள் இவருக்கு நடிக்க வரும் வாய்பை தட்டிப் பறித்துத்தான் நடித்து வருகிறார் கள் என்றும் புருடாவிட்டார் சுனிஷித்.
நடிகை லாவண்யா தமிழில் ‘பிரம்மன்’, ‘மாயவன்’ படங்களில் நடித்தார். அடுத்த அதர்வாவுடன் புதிய படத்தில் நடிக்கிறார்.
நடிகை தமன்னாவுக்கு தமிழில் கைவசம் படங்கள் எதுவும் இல்லை, தெலுங்கில் ‘தட்ஸ் இஸ் மஹாலட்சுமி’, ‘சீட்டிமார்’ மற்றும் இந்தியில் ‘போலே சுடியன்’ படங்களில் நடித்து வருகிறார்.