காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420. நந்தா நந்திதா ஆகிய படங்களில் நடித்திருப்பவர் மேக்னாராஜ். இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2018 ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது. சிரஞ்சீவி சார்ஜா கன்னட படங் களில் ஹீரோவாக நடித்து வந்தார். இதுவரை 23 படங்களில் நடித்திருக்கிறார்.


சிரஞ்சீவி சார்ஜாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் உடனடியாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனலிக்காமல் இன்று மாலை மரணம் அடைந்தார்.
39 வயதே ஆகும் சிரஞ்சீவி சார்ஜா தமிழ் நடிகர் அர்ஜூனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.