மகனை கட்டிப்பிடிக்க முடியாமல் கொரோனா பாதித்த நடிகை தவிப்பு..

டிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர்.
அதுபோல் நடிகர் விஷால், நடிகைகள் ஐஸ்வர்யா அர்ஜுன், நிக்கி கல்ராணி, சுமலதா, நவ்நீத் கவுர் ,டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலி, போன்றவர் களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு குணம் அடைந்தனர்.

மணிரத்னம் இயக்கிய ’உயிரே’ படத்தில் ’தைய தைய தையா’ பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை மலைக்கா அரோரா தற்போது கொரோனா வைரஸ் பாதித்து மும்பையில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார். இவரது மகன் அர்ஹான் . செல்ல நாய்க் குட்டி காம்பவுண்டுக்கு மறுபக்கம் உள்ள வீட்டில் தங்கி இருக்கின்றனர்.


கொரோனா பாதிப்பால் தனிமையில் இருக்கும் மலைக்கா மகனை கட்டிபிடிக்க முடியவில்லையே என மெசேஜ் பகிர்ந் திருக்கிறார். அவருக்கு தோழி நடிகைகள் ஆறு கூறி வருகின்றனர். சீக்கிரமே குணம் அடைந்து மகனை தழுவலாம் கவலை வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
மகனை தொட முடியாமல் தாயும். தாயை கட்டிபிடிக்க முடியாமல் மகனும் என தாய் பிள்ளை பாசத்தை உள்ளடக்கிய படம் ஒன்றை தந்து இன்ஸ்டாகிராமில் நடிகை மலைகா அரோரா வெளியிட்டிருக்கிறார்.