விஜய், சூர்யா மீது நடிகை பரபரப்பு புகார்.. எனக்கு ஏதாவது நேர்ந்தால்..

--

டிகை மீரா மிதுன். மாடல் அழகியாக இருப்பது டன் ஒருசில படங்களிலும் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று பிரபலம் ஆனார்.
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதி ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்திருக்கும் மீரா, ’நடிகர் விஜய், தனுஷ், நடிகை திரிஷா போன்றவர் களை விமர்சித்திருந்தார். இதையடுத்து விஜய், சூர்யா நடிகர்களின் ரசிகர்கள் மீரா மிதுனை அவரது இணைய தள பக்கத்துக்கே சென்று கடுமையாக தாக்கி விமர்சித்து வருகின்றனர்.
தற்போதுசூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை மிரட்டு வதாக கதறி உள்ளார் மீரா. அவர் சமூக வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எனக்கு ஏதாவது நேர்ந்தால் விஜய், சூர்யா இருவரும்தான் பொறுப்பு. அவர்களது ரசிகர்கள் என்னை மிரட்டுகின்றனர். இதனால் நான் தடுமாற்றம் அடைகிறேன். இதற் கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டும். எனது மொபைல் நம்பரை அவர்கள் பலருக்கும் தந்திருக்கிறார்கள்.
எனக்கு கற்பழிப்பு மிரட்டல், கொலை மிரட்டல் வருகிறது. இதுபோல் உங்கள் மனைவி, குழந்தைக்கு நடந்தால் நீங்கள் ஏற்பீர்களா? 80க்கும் மேற்பட்ட போன்களிலிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது.
இவ்வாறு மீரா மிதுன் கூறி உள்ளார்.