சத்தமில்லாமல் நடந்த ”வாம்மா மின்னல்” கேரக்டர் தீபா திருமணம்….!

கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘மாயி’ படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்கும் நகைச்சுவைக் காட்சியில் ‘வாம்மா மின்னல்’ நகைச்சுவைக்கு சொந்தமான மின்னல் தீபாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

மின்னல் தீபா தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘யாரடி நீ மோகினி’ தொடரில் மின்னல் தீபா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடிகை மின்னல் தீபாவிற்கு சுப்பிரமணி என்பருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

தனது திருமண புகைப்படங்களை தீபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CEUj9thDv1e/

நடிகை தீபாவிற்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை தீபா கடந்த 2013 ஆம் ஆண்டு ரமேஷ் எனும் உதவி நடன இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.