மும்பையில் நடிகை மர்ம மரணம்!

மும்பை,

மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்த நடிகை மர்மமான முறையில் மரண மடைந்துள்ளார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் அந்தேரி பகுதியில் வசித்து வந்தவர் நடிகை கிருத்திகா சவுத்ரி. 27 வயதான இவர் தனியாக அங்குள்ள அடுமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

இவரது வீடு 4 நாட்களாக திறக்கப்படாமல் இருந்து. இந்நிலையில், வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து குடியிருப்புவாசிகள் அந்தேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்தபோது, கிருத்திகா இறந்த நிலையில், அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி யபோலீசார், கிருத்திகாவின் மர்ம சாவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மமான முறையில் இறந்த கிருத்திகா ஹரித்துவாரை சேர்ந்தவர். இவர் டிவி நடிகையாகவும், கங்கனா ரணாவத் நடித்த ரஜ்ஜோ என்ற படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.