கொரோனா ஊரடங்கில் காதலன் விக்னேஷ்சிவனுடன் வீட்டிலிருக்கிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் வெப் தொடருக்காக சில வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அத்துடன் தான் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஸ்கிரிப்ட்டையும் முறைப்படுத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டிலேயே முடங்கி கிடந்த நயன்தாரா விளம்பர பட மொன்றில் சத்தமில்லாமல் நடித்து முடித்திருக்கிறார்.

துணிகள் துவைத்த பின் சலவைக்கு பயன்படுத்தும் வாசனை திரவம் பற்றிய அந்த விளம்பரத்தை நயன்தாரா டீம் தனது டிவிட்டரில் பக்கத்தில் வெளிட்டுள்ளது.
கொரொனா லாக்டவுன் முடிந்து பட ஷூட்டிங் தொடங்கியவுடன் அண்ணாத்த, மூக்குத்தி அம்மன். நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் நயன்தாரா.