ரசிகர்களுடன் “அறம்” பார்த்த நயன்

யன்தாரா நடிப்பில் நேற்று வெளியான ‘அறம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில், சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. படம் சுவாரஸ்யமாக இருக்கிறது என்பதோடு, சிறப்பான கருத்துக்களை முன்வைக்கிறது என்று சமூகவலைதளஙகளில் நெட்டிசன்கள் எழுதித்தள்ளுகிறார்கள்.

இது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், படத்தின் நாயகியான நயன்தாரா படத்தை ரசிகர்களுடன் சென்னை காசி தியேட்டரில் பார்த்து ரசித்தார். ரசிகர்கள் எந்தெந்த காட்சிகளை மிகவும் ரசிக்கிறார்கள் என்பதை நேரடியாக கவனித்ததாக தெரிவித்தார்.

முன்னதாக, நயன்தாரா வருகையால் காசி தியேட்டரில் ரசிகர்கள் பெருமளவு குழுமிவிட்டார்கள்.   சில ரசிகர்கள் உற்சாக மிகுதியில் நயன்தாரா அருகே செல்ல முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து நயன்தாராவுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.