அடுத்த வீட்டு பிரச்சினை நடிகைக்கு தேவையா? குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா சுளீர்!

சென்னை,

டுத்த வீட்டு பிரச்சினை நமக்கு தேவையா என்று குஷ்புவுக்கு நடிகை ஸ்ரீபிரியா கேள்வி விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடுத்த வீட்டு பிரச்னைகளை, நடிகைகள் கேட்டு தீர்வு வழங்குவது ஏற்புடையது அல்ல என்று முன்னாள்  நடிகை ஸ்ரீபிரியா கருத்து தெரிவித்துள்ளார்.

nijankal

1980 வாக்கில் பிரபலமாக இருந்தவர்கள்  ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ராதிகா போன்ற நடிகைகள். அப்போதைய கதாநாயகர்களான  ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீபிரியா.

இவர் சின்னத்திரையிலும் நடித்து உள்ளார். சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், ஜீ தமிழ் சேனலில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பலரும் கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள். அவர்களைத்தொடர்ந்து இப்போது ஸ்ரீபிரியாவும் அந்த நிகழ்ச்சி மீதான தனது கோபத்தை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

lakshmi-ramakrishnan-solvathellam-unmai

மக்கள் பிரச்சினையை தீர்க்க நீதிமன்றம் இருக்கிறது. அப்படியிருக்க எதற்காக சேனல்களுக்கு மக்கள் வர வேண்டும்.  அதற்கு நியாயம் சொல்ல இவர்கள் நீதிபதியா? இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நமக்குத் தேவையா? என்று தனது கருத்தினை ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார் ஸ்ரீபிரியா.

லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை ஊர்வசி, நடிகை கீதா மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.