காதலனை மணக்கிறார் நடிகை நிஹாரிகா..

மிழில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் நடித்ததுடன் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார் நடிகை நிஹாரிகா. இவரும் குண்டூரைச் சேர்ந்த சைதன்யா ஜொன்னல கட்டா என்பவரும் நீண்ட நாட்களாக பழகி வந்தனர். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது.


நிஹாரிகா நடிகர் நாகேந்திர பாபுவின் மகள். சிரஞ்சீவி, பவன் கல்யாணின் நெருங்கிய உறவினர் மகள். முன்னதாக நிஹாரிகாவும் தெலுங்கு நடிகர் நாக சவுரியாவும் காதலிப்ப தாக கிசு கிசு பரவியது. அந்த கிசுகிசு புஷ்வானம் ஆகிவிட்டது.