சுதந்திரம் பற்றி நடிகை ஓவியா.. ’கொடுப்பதில்லை எடுத்துக்கொள்ளப்படுவது..’

ளவாணி நடிகை ஓவியா பல்வேறு படங்களில் நடித்த நிலையில் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றார். அதில் மற்றொரு போட்டியாளர் ஜூலியுடன் மோதல் ஏற்பட்டது. ஆனாலும் ஓவியா தனது லாவகமான போக்கால் அந்த பிரச்னையிலிருந்து வெளியில் வந்தார். பின்னர் ஆரவ் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். தங்களுக்குள் காதல் எதுவும் இல்லை நட்புதான் என்று கூறினாலும் அவருடன் அடிக்கடி டேட்டிங்கிங் செய்து வருகிறார்.


சுதந்திரதினமான இன்று சுதந்திரம் பற்றி இணைய தள பக்கத்தில் கருத்து வெளி யிட்டிருக்கிறார் ஓவியா, அதில் சுதந்திரம் என்பது கொடுப்படுவதில்லை எடுத்துக் கொள்ளப்படுவது என சுபாஷ் சந்திர போஸின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.