Random image

தங்க நகைகள் பளபளப்பில் ஜொலி ஜொலித்த ’மாமங்கம்’ நடிகையின் திருமணக் கோலம்.. 7 வருட காதலனை மணந்த படங்கள் வெளியீடு.

ம்மூட்டி தமிழ், மலையாளத்தில் நடித்த படம் மாமங்கம். பிரமாண்ட பொருட் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டது. இதில் தேசிய அளவில் கைப்பந்து போட்டியில் விருது வென்ற வீராங்கனை பிராச்சி தெஹ்லான் கதாநாயகியாக நடித்தார்.


சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ரோஹித் சரோஹாவை மணந்தார் பிராச்சி. இருவரும் கடந்த 7 வருடமாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் குறைந்த அளவிலான அழைப்பாளர்களுடன் நடந்தது. திருமணக் கோலத்தில் இருந்த பிராச்சி கனமான தங்க நகைகள் அணிந்து ஜொலி ஜொலித்தார். மணமகன் ரோஹித் ஷெர்வானி உடையில் மின்னினார். திருமண விழாவில் பங்கேற்றவர்கள் ஜோடி பொருத்தத்தையும் பிராச்சியின் நகை அலங்கார மற்றும் உடை அலங்காரத்தையும் பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்தனர்.