மம்முட்டி பட நடிகை காதலருடன் திருமணம்.. தொழிலதிபரை மணக்கிறார்..

மிழ் மற்றும் மலையாளத்தில் அதிக பொருட் செலவில் உருவான படம் மாமாங்கம். சரித்திர பின்னணியில் உருவான இக்கதையில் கதாநாய கியாக நடித்தவர் பிராச்சி தெஹலான். கைப்பந்து வீராங்கணை ஆன இவர் தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்றிருக்கிறார், வரும் 7ம் தேதி பிராச்சி திருமணம் டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் நடக்கிறது கடந்த 7 வருடமாக காதலித்த ரோஹித் சரோஹா என்பவரை மணக்கிறார். இவர் தொழில் அதிபர் மற்றும் டெல்லி வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர் ஆவார்.


திருமணம் பற்றி பிராச்சி கூறும்போது; ஒரே நாளில் நிச்சயதார்த்தத்தையும் திருமணம் வைத்திருக்கி றோம். காலையிலும் நிச்சயதார்த்தன் நடக்கும், மாலையில் திருமணம் நடக்கும். கொரோனா தொற்று ஊரடங்கு என்பதால் ஒவ்வொரு விழா விற்கும் 50 பேரை மட்டும் அழைத்துள்ளோம். அவர்கள் மாஸ்க் அணிந்து வருவார்கள் இல்லா விட்டாலும் மாஸ்க் மற்றும் சானிடிசர்களின் நாங்கள் அந்த இடத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். விழாவிற்கு முன்னும் பின்னும் அந்த இடத்தை நன்றாக சுத்தம் செய்யுமாறு கேட்டுள்ளோம்.
இவ்வாறு பிராச்சி தெஹலான் தெரிவித்தார்.