நடிகை திருமணம், சபரிமலை  விவகாரம்.. இதுதான் மோடிக்கு முக்கியமா? : கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்

சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டாவில் வரும் ஜனவரி 6-ம் தேதி நடைபெறும்  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதற்கு  நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, சில இந்து அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்களை காவல்துறையினர் கெடுபிடி செய்வதாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகத்துக்கு எதிராக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பாஜவினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பாஜகவின் சபரிமலை போராட்டத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வரும் னவரி -6ம் தேதி கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டாவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக்  கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஜக மூத்த தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும்  நிலையில் இந்தக் கூட்டம் கேரளாவில் பாஜகவின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக அமையும் என அக்கட்சியினர்  கூறுகின்றனர்.  இதுமட்டுமின்றி ஜனவரி 27-ம் தேதி திருச்சூரில் நடைபெறும் கேரள மாநில பாஜக இளைஞரணி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.

இந்த நிலையில் சபரிமலை விவகாரத்துக்காக பிரதமர் மோடி கேரளா வருவதற்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அவர்கள், “கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களுக்கு போதுமான நிதியை மோடி தலைமையிலான பாஜக அரசு ஒதுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிக்கும் மோடி வரவில்லை.

ஆனால் நடிகை பிரியங்கா சோப்ரா திருமண வரவேற்பிற்கு நேரடியாக சென்று கலந்துகொள்கிறார். இப்போது சபரிமலை விவகாரத்துக்காக நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களைவிட நடிகை திருமணமும், ஐயப்பன் கோயில் விவகாரமும்தான் மோடிக்கு முக்கியமாகத் தெரிகிறதா” என்று இவர்கள் குறிப்பிட்டு பதிவு செய்து வருகிறார்கள்.

 

 

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Actress priyanka chopra marriage reception Sabarimala affair important prime minister modi Netizens condemned, நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம், வரவேற்பு சபரிமலை  விவகாரம்பிரதமர் மோடி  கண்டனம் நெட்டிசன்கள்
-=-