ரசிகர்களுடன் டிவிட்டரில் பேசும் நடிகை ரைஸா..

--

’பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்தவர் ரைசா வில்சன். கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனார். டிவிட்டர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர். தற்போது ஆப்பிள் போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாய்ஸ் கால் மூலம் ரசிகர்களை தொடர்பு கொண்டிருக்கிறார்.


சினிமா பிரபலங்களில் ரைசாதான் முதலில் வாய்ஸ் குரலில் டிவிட் செய்திருப்பவர் ரைசாதான். ’எல்லாவற் றுக்கும் தீர்வு இதுதான்’ என தெரிவித் திருக்கும் அவர் எல்லோரும் வாய்ஸ் மெசேஜில் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்களிடம் நெருக்கமாக பேச முடியும் என்று கூறி உசுப்பேற்றி இருக்கிறார்.
மூன்று வாய்ஸ் டிவிட் செய்திருக்கும் ரைஸா, பிக்பாஸில் அவர் பேசிய ’அடபோங்கய்யா ..’என்ற பிரபல வசனத்தையும்பேசி இருக்கிறார். ஆனால் சில ரசிகர்கள் தங்கள் போனில் இந்த வசதி இல்லையே என்ற குறைபட்டுக்கொண்டி ருக்கின்றனர்.
ரைஸா தற்போது காதலிக்க யாருமில்லை. எப் ஐ ஆர் ஆகிய படங்களில் நடிக்கிறார்.