டில்லி,

காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள குழு தலைவராக நடிகை ரம்யாவை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி நடிகை ரம்யாவை  பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் குழு தலைவராக நியமித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர், ராகுல் காந்தி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

”காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள குழுவிற்கு தலைவராக ரோதக் எம்.பி.யும், ஹரியானா முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடாவின் மகனுமான தீபந்தர் சிங் ஹூடா இருந்து வந்தார்.

இந்நிலையில் அவருக்குப் பதிலாக, சமூக வலைதள குழுவின் தலைவராக நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார்” என அறிவித்துள்ளார்.

விரைவில் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால், கர்நாடகாவை சேர்ந்த ரம்யாவை நியமித்து இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை ரம்யா ஏற்கனவே சமூக வலைதளங்களில் காங்கிரசுக்கு ஆதரவாக தைரியமாகவும், சிறப்பாகவும் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதன் காரணமாக காங்கிரசாரிடையே அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளது.

இதன் காரணமாகவே அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைதள தலைவராக பொறுப்பேற்றுள்ள ரம்யா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வரை சந்தித்து ஆசி பெற்றார்.