பாதிப் படத்தில் இருந்து பயத்தால் ஓட்டம் பிடித்த நடிகை

கொடைக்கானல்

கொடைக்கானல் மலை உச்சியில் நடிக்க பயந்த நடிகை அனுபமா பிரகாஷ் பாதியிலேயே சொந்த ஊரான டில்லிக்கு யாரிடமும் சொல்லாமல் சென்று விட்டார்.

ஏ கேசவன் இயக்கத்தில் கதிரவன் ஸ்டூடியோ என்னும் நிறுவனம் “அவளுக்கென்ன அழகிய முகம்” என்னும் தமிழ்படத்தை தயாரித்து வருகிறது.  இந்த படத்தின் பாடல் காட்சி கொடைக்கானல் மலை உச்சியில் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  இந்த படத்தின் நாயகியான அனுபமா பிரகாஷ் இந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார்.

உயரமான மலை உச்சியில் நடனமாட அனுபமா மிகவும் பயந்துள்ளார்.   ஆனால் அதை சொல்லாமல் தனது ஓட்டல் அறைக்கு சென்று வருவதாக சொன்னவர் நேரே மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனது சொந்த ஊரான டில்லிக்கு விமானத்தில் சென்று விட்டார்.

இந்த விவரம் தெரியாத படப்பிடிப்பு குழுவினர் அவருக்காக காத்திருந்தனர்.   பிறகு அவரை காணவில்லை என அங்கு தேட ஆரம்பித்துள்ளனர்.  பிறகு ஓட்டுனர் மூலம் அவர் டில்லிக்கு சென்றது தெரிய வந்தது.

அதன் பிறகு தயாரிப்பாளர் டில்லிக்கு சென்று அவரை அழைத்து வந்தார்.   நடிகையின் வேண்டுகோளுக்கு இணங்க மலை உச்சி இல்லாமல் வேறு இடத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து வருகிறது.

கார்ட்டூன் கேலரி