பாலியல் புகாரை திரும்ப பெற்றார் கவர்ச்சி நடிகை நடிகை ராணி

டிகர் சண்முகராஜன் மீது காவல் நிலையத்தில் அளித்த  பாலியல்  புகாரை சில மணி நேரங்களிலேயே கவர்ச்சி நடிகை ராணி திரும்பப் பெற்றார்.

நடிகர் விக்ரம் நடித்த “ஜெமினி”  படத்தில் இடம்பெற்ற “ஓ போடு..” பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியதன்  மூலம் பிரபலமானவர் ராணி. அதற்கு முன்பே “நாட்டாமை” படத்தில் ஆசிரியையாக நடித்தவர்.

#MeToo மூலம் தற்போது பல பிரபலங்கள் மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை புகாராக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விருமாண்டி காளை மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் குணச்சித்திர நடிகரான சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக ராணி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும் இன்று இருவரும் இணைந்து நடித்த படப்பிடிப்பின் போது தன்னை சண்முகராஜன் தாக்கியதாகவும் புகார் அளித்தார். இது திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் புகார் கூறிய சில மணி நேரங்களில்   ராணி புகாரை திரும்பப் பெற்றார்.

கருத்துவேறுபாடுகள் நீங்கி களைந்து சமரசம் ஏற்பட்டு விட்டதாக நடிகர் சன்முகராஜன் தெரிவித்தார்.