சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் சகோதரி மீது நடிகர் ரியா சக்ரபோர்த்தி புகார்

மும்பை:
சுஷன்ட் சிங் ராஜ்புட்டின் சகோதரி பிரியங்கா சிங் மற்றும் டெல்லியை சேர்ந்த மருத்துவர் தருண் குமார் மோசடி செய்ததாகவும், சுஷாந்த் சிங்கிற்கு தவறான மருந்துகளை பரிந்துரைத்ததாகவும் நடிகை ரியா சக்கரபோர்த்தி மும்பை போலீசில் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியை சேர்ந்த அந்த மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், நோயாளியுடன் கலந்தாலோசிக்காமல் மின்னணு முறையில் பரிந்துரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆனாலும் அந்த மருந்தை சுஷாந்த் சிங்கிற்கு மருத்துவர் பரிந்துரைத்துள்ளார், மேலும் அந்த மருந்தை எடுத்துக்கொள்ள சுஷாந்த் சிங்கின் சகோதரி அவரை வற்புறுத்தியதாகவும் நடிகை ரியா தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங்கிடம் நான் அந்த மருந்தை எடுக்க வேண்டாம் என்று தெரிவித்தும், அவர் தன் சகோதரி பரிந்துரைத்த மருந்தை மட்டுமே எடுத்துக் கொள்வேன் என்று தெரிவித்தார் என்று ரியா சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த மருத்துவர் தருண்குமார் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் சகோதரி பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்டு சிறிது நாட்களில் சுஷாந்த் சிங் உயிரிழந்தார் என்று ரியா சக்கரபோர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் நடிகை ரியா சக்கரவர்த்தி தன்னுடைய புகாரில், போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் அடிப்படையில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் சகோதரி மற்றும் மருத்துவர் தருண்குமாரை உடனடியாக கைது செய்யுமாறு மும்பை போலீசிடம் வற்புறுத்தியுள்ளார்.