நடிகை ரிச்சா மூச்சு விடமுடியாமல் தவிப்பு.. காட்டுத் தீயால் படபடப்பு..

னுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ மற்றும் சிம்பு நடித்த ‘ஓஸ்தி’ படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபத்யாய். அமெரிக்காவில் தனது நீண்டகால காதலன் ஜோ லாங்கெல்லாவை மணந்துக்கொண்டு அமெரிக்காவில் குடியேறி போர்ட்லேண்ட் நகரில் தங்கியுள்ளார்.


ரிச்சா தங்கி உள்ள பகுதியில் காட்டுத்தீ காரணமாக, கார்று மாசு ஏற்பட்டு மூச்சு விட முடியாஅமல் அவதிப்பட்டு வருகிறார். அவரை போலவே போர்ட்லேண்டில் புதிய காற்றிற்காக பலரும் போராடி வருவதாக தெரிகிறது. போர்ட்லேண்ட் மேயர் அவசரகால நிலையை அறிவித்தார்.
ரிச்சா லாங்கேலா வீட்டில் இருப்பதாகவும், காற்றின் தரம் மோச மாக இருப்பதால் வெளியேறவில்லை என்றும் தெரிகிறது. புகை வீடுகளுக்குள் புகுந்துவிட்டதாகவும், புகை காரண மாக சுவாசிப்பது கடினம் என்றும் அவர் கூறுகிறார். தற்போது அவர் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் காணப்படுகிறார். அவரது முகத்தில் ஒரு படபடப்பு தெரிந்தது.


சுவாச முகமூடியுடன் தன்னைப் பற்றிய ஒரு படத்தைப் பகிர்ந்த ரிச்சா, “நான் இப்போது வேறு வகையான முகமூடி யை அணிய வேண்டும் என்று நினைக் கிறேன். இது வெளியில் மிகவும் புகை பிடித்ததுவிட்டது’ என த் தெரிவித்திருக்கிறார்.