கன்னட நடிகை கார் விபத்தில் சிக்கினார்.. கால் எலும்பு முறிவு..

ன்னட பட இயக்குனர் ராஜேந் திர சிங் பாபுவின் மகள் ரோகினி சிங். இவர் ரிசிகா சிங் என்ற பெயரில் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

 


இவர் நேற்று கன்னட நடிகர் ஜக் ஜக்தீஷ் மகள் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு காரில் பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் ஜக் ஜக்தீ ஷின் மற்றொரு மகள் அர்பிதாவும் வந் தார். ரிசிகாவின் நணபர் காரை ஓட்டி வந்தார்.
எலஹங்கா – மாவல்லி புரா சாலையில் அதிகாலை வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் கார் பயங்கரமாக மோதியது
காரிலிருந்த ரிசிகா சிங், உடன் வந்த மற்ற இருவரும் படுகாயம் அடைந் தனர். அவர்கள் கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நடிகை ரிசிகா சிங், கண்டீவீரா , மாணிக் யா, கல்லா மல்லா சுல்லா, ரிஷி, பெங்கி பிருகாலி உள்ளிட்ட பல படங்களில் ரிசிகா நடித்துள்ளார்.
சமீபத்தில்தான கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே என்பவரும் பெங்களூரில் நடந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். சிறிது இடைவெளியில் அடுத்தடுத்து 2 நடிகைகள் கார் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.