நான்கு ரூபாய்க்கு உணவளிக்கும் உணவகம் : நடிகை ரோஜா துவக்கம்

கரி

ந்திராவில் நகரி பகுதியில் ரூ. 4 க்கு உணவளிக்கும் நடமாடும் ஒய் எஸ் அண்ணா உணவகத்தை நடிகை ரோஜா துவக்கி வைத்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிரபலமான நடிகை ரோஜா. இவர் நகரி தொகுதியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அத்துடன் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி மாநிலத் தலைவி பதவி வகித்து வருகிறார்.

நேற்று நடிகை ரோஜாவின் பிறந்த நாள் ஆகும். ரோஜா தனது பிறந்த நாளை தனது நகரி தொகுதியில் கொண்டாடினார். அப்போது அவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட நடமாடும் உணவகத்தை துவக்கி வைத்தார். ஒய் எஸ் அண்ணா என பெயர் சூட்டப்பட்ட உணவகத்தில் ரூ.4 க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது.

நடிகை ரோஜா செய்தியாளரிகளிடம், “மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அனைத்து இடங்களிலும் இத்தகைய நடமாடும் உணவகம் மூலம் தரமான உணவுகள் வழங்கப்படும். பொதுமக்கள் என்னை சுலபமாக அணுக வசதியாக நம்ம எம் எல் ஏ என்னும் மொபைல் ஆப் ஒன்றை இன்று துவக்கி உள்ளேன்.” என தெரிவித்தார்.