சாய் பல்லவி ஒரு சிறந்த டான்ஸருமான மாரி 2 படத்தில் தனுஷ் உடன் அவர் ரவுடி பேபி பாடலுக்கு ஆடிய ஆட்டம் இன்றைக்கும் தெறிக்கவிட்டுக் கொண் டிருக்கிறது இணைய தள யூடியூபில் ரெக்கார்ட் பிரேக் சாதனை செய்தது. சாய் பல்லவி படம் என்றால் அசத்த லான ஒரு நடனம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு செய்திருக்கிறார். தமிழில்தான் இப்படியென்றால் தெலுங்கிலும் இதுதான் நிலைமை.

திரைப் படங்களில் நுழைவதற்கு முன்பே டிவி நடன நிகழ்ச்சிகளில் பரிசுகளை தட்டி வந்திருகிறார் சாய் பல்லவி. அவர் நடித்த ‘பிரேம்’ திரைப் படம் அவருக்கு நடனத்தில் பெயரை பெற்றுத்தந்தது. தற்போது தெலுங்கில் ​​சாய் பல்லவி, சேகர் கம்முலாவுடன் ‘லவ் ஸ்டோரி’ படத்திற்காக பணியாற்றி வருகிறார், இதில் நாக சைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஸ்பெஷல் பாடலுக்காக கொரோனா ஊரடங்கில் புதிய நடன அசைவுகள் அதாவது புதிய் ஸ்டெப்ஸ்கள் செய்து பயிற்சி எடுத்து வருகிறாராம்.