சமந்தா இந்துவாக மாறவில்லை ..! நாகசைத்தன்யா விளக்கம்

nachaithanya and samantha

தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மூத்த மகனாகிய நாகசைத்தன்யாவும் தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாகவுள்ள சந்தாவும் காதல் திருமணம் செய்து கொள்ளப்போவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் சில தினங்களுக்கு முன்பு சமந்தா நாகசைத்தன்யாவை திருமணம் செய்ய மதம் மாறிவிட்டார் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன இதை குறித்து நாகசைத்தன்யாவிடம் கேட்டப்போது அப்படி ஒன்றும் இல்லை நான் ஜாதி, மதத்தை எல்லாம் பார்ப்பதில்லை அன்று எங்களுக்கு ஷூட்டிங் இருந்தது திடீரென அப்பா எங்களை ஒரு பூஜைக்கு அழைத்தார் நாங்கள் அங்கு சென்று அவரிடம் ஆசிர்வாதம் பெற்றோம் இது தான் நடந்தது என்று கூறினார்.

இந்த விளக்கத்தின் பின்னாவது இதை போன்ற புரளிகளை யாரும் பரப்பாமல் இருக்கட்டும்,.