சமையலறையே கதியாக கிடக்கும் சமந்தா..

பிரபல நடிகர்களுடன் நடித்த பாப்புளர் நடிகையாக இருக்கும் சமந்தாவுக்கு சமையல் செய்ய தெரியாதாம். சில சமயம் சமையல் செய்து அதை கணவர் நாக சைதன்யாவுக்கு பரிமாற முயன் றால் அவர் வெளியே போகலாம் என்று நைசாக ஓட்டலுக்கு அழைத்து சென்று விடுகிறாராம். இதனால் நன்கு சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார் சமந்தா. அதற்கான நேரத்துக்காக காத்திருந்தார்.

கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் அடைந்திருக்கும் இந்நாளில் சமையல் கற்க முடிவு செய்தார். பிரத்யேக ஊட்டசத்து நிபுணர் ஸ்ரீதேவி ஜஸ்தியிடம் சமையல் பயிற்சி பெற்று வருகிறார் சமந்தா,கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக சமையல் கற்று வந்த சமந்தா தற்போது ருசியாகவும் சத்துள்ளதாகவும் சமைப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டிருக்கிறார். இதனால் யோக போன்ற உடற்பயிற்சி நேரம் போகா மீதி நேரங்களில் சமையலறையே கதியாக இருக்கிறா ராம்
ருசியான டாம் யம் சூப், சிவப்பு அரிசி சாதம், நூடுல்ஸ் என விதவிதமாக சமைத்து உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கத் தொடங்கி இருக்கிறாராம். அவரும் சாப்பிட்டு மற்றவர் களுக்கும் கொடுத்து பாராட்டு பெற்றார் சமந்தா. இனிவீட்டிலிருக்கும்போதெல்லாம் சத்துள்ள சமையல் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.