நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்!

ஐதராபாத்,

நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடிகை சமந்தா நடிகை,  நாகசைதன்யா திருமண நிச்சயம் நடைபெற்றது.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பிரபல தெலுங்குநடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யா. இவருக்கும், நடிகை சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதுபற்றி அறிந்த இருவீட்டாரும் கலந்துபேசி திருமணத்துக்கு சம்மதித்தனர்.

திருமணத்துக்கு முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த விழாவில் சமந்தா மற்றும் நாக சைதன்யா  குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.  இவர்களது திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விழாவுக்கு நடிகர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Actress Samantha-Naga Chaitanya wedding engagement!, Cine Bits, சினிபிட்ஸ், நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்!
-=-