குழந்தைக்கும் பெற்றொருக்கும் சமந்தா தொடங்கிய கல்வி திட்டம்..

டிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் ஐதராபாத்தில் கணவருடன் வசிக்கிறார். படப்பிடிப்பு இல்லாவிட்டாலும் தன்னை வீட்டில் பிஸியாக வைத்திருக்கிறார். யோகா பயிற்சி, சமையல் கலை என தெரியாத விஷயங்களை கற்றுக்கொண் டார். அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் சமந்தா அதன்மூலம் சமூக பணிகளாற்றி வருகிறார்.


தற்போது ஏகம் ஆரம்பகால கல்வி மையம் என்ற முன்பள்ளி கற்கும் பயிற்சி வகுப் பை தோழிகள் ஆடை வடிவமைப் பாளர் ஷில்பா ரெட்டி மற்றும் கல்வியாளர் முக்தா குரானா சேர்ந்து தொடங்கி உள்ளார்.
இதுபற்றி தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருக்கும் சமந்தா “இயர்லி ஏகம் குழு. எங்கள் புதிய முயற்சி குறிப்பாக பெற்றோர்களை மேம்படுத்து வதற்கும் இந்த சோதனை காலங்களில் குழந்தை களை நல்வழிபடுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் வரும்” என்றார்.
நடிகை சமந்தா அடுத்து விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கும், ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தாலும் இன்னும் அதற்கான வழிகாட்டுதல் நெறி முறைகளுடன் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.