நடிகை சமந்தாவுடன் தியானம் செய்யும் நாய்க்குட்டி..

டிகை சமந்தா, கணவர் நாக சைதன்யாவுடன் ஐதராபாத் வீட்டில் வசிக்கிறார். கொரோனா தடையால் இருவரும் தனிமையில் இருக்கின்றனர். சமந்தா தற்போது யோகாசனப் பிரியை ஆகி இருக்கிறார். அடுத்த 48 நாட்களுக்கு தினமும் ஈஷா கிரியா யோகம் செய்யவிருக்கிறார்.


சமந்தா மேற்கொள்ளும் யோகாவில் தியானத்தில் முக்கிய பங்காக இருக்கும் என்கிறார். தியானம் செய்ய சமந்தா அமர்ந்தவுடன் கூடவே அவர் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி ஹாஷ் தியானம் செய்ய தொடங்கி விடுகிறது.