அந்தரத்தில் ரப்பர்போல் உடலை வளைத்து சாகசம் காட்டும் சம்யுக்தா..

டிகைகள் சினிமாவில் நடிப்பில் போட்டி காட்டிய நிலைமாறி தற்போது தங்களது உடல் திறனை இணைய தளத்தில் காட்டி வருகின்றனர். தமிழில் கோமாலி, வாட்ச் மேன், பப்பி ஆகிய படங்களில் நடித்தவர் சம்யுக்த ஹெக்டே. இவர் தெலுங்கில் கிராக்பார்ட்டி படத்தில் நடித்தார். ஆனாலும் இவர், ’புட்ட பொம்மா ’ பாடல் புகழ் பூஜா ஹெக்டேபோல் இன்னும் ரசிகர்களின் கவனத்தை கவர வில்லை.

இந்நிலையில் சில தனங்களுக்கு முன் பூஜா ஹெக்டே உடலை வில்லாக வளைக்கும் யோகாசனம் செய்து அந்த படத்தை வெளியிட்டார். அதற்கு போட்டியாக சம்யுக்த ஹெக்டே தற்போது ஒரு வீடியோ பகிர்ந்திருக்கிறார். அந்தரத்தில் இருக்கும் வளையத்தை பிடித்துக்கொண்டு தலைகீழாக தொங்கியபடி சாகச வித்தைகள் செய்கி றார். தனது உடலை எவ்வளவு ஃபிட்டாக வைத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத் தும் விதமாக இந்த வீடியோ அமைந் துள்ளது.
சம்யுக்தா தற்போது கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.