சைக்கிளில் சென்ற நடிகையிடம் மொபைல் போன் பறிப்பு

சென்னை

டிகை சஞ்சனா சிங் சைக்கிளில் செல்லும் போது அவரிடம் இருந்து மொபைல்  போனை இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.

நடிகை சஞ்சனா சிங் ரேணிகுண்டா படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள மும்பை நடிகை ஆவார்.   இவர் தினமும் உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுவது வழக்கம்.  அவ்வாறு நேற்று சைக்கிளில் தனது  உறவினர் வீட்டுக்கு அண்ணாநகர் சிந்தாமணி வழியாக சென்றுள்ளார்.

தனது மொபைல் போனில் கூகுள் மேப்பை ஆன் செய்து அதை முன் ஸ்டேண்டில் வைத்து சைக்கிளை ஓட்டி உள்ளார்.  அதைப் பார்த்து வழியை தெரிந்துக் கொண்டு சென்ற சஞ்சனாவின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளனர்.   அதில் ஒருவர் அவருடைய மொபைல் போனை பறித்துக் கொண்டுள்ளார்.   பைக் விரைவாக சென்றுவிட்டது.

அதிர்ச்சி அடைந்த சஞ்சனா தனது சைக்கிளில் அவர்களை துரத்தி உள்ளார்.  அவரால் பிடிக்க முடியவில்லை.   அதன் பிறகு சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சஞ்சனா புகார் அளித்துள்ளார்.   காவல்துறையினர் அவரது புகாரை பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

இது குறித்து சஞ்சனா சிங், “எனது மொபைல் போன் விலை ரூ,1 லட்சம்.  அது கூட எனக்கு அதிக கவலையில்லை.   ஆனால் அதைவிட முக்கியமான பல டாக்குமெண்டுகள், வங்கி கணக்கு விவரங்கள்,  புகைப்படங்கள், அந்த மொபைலில் உள்ளது.   அதுதான் கவலை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.