நடிகை சபர்ணா தற்கொலை! உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் மரணம்?

சென்னை,

டிகை சபர்ணா, மன உளைச்சலால்,  தற்கொலை செய்ய  அவசரப்பட்டு கையை அறுத்துக்கொண்டதும், பின்னர் நிதானமாகி,   உடனே ஆம்புலன்சை அழைத்திருக்கிறார். ஆனால் ஆம்புலன்சு வராததால் அவர் மரணத்தை தழுவி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் தனது அபார்ட்மெட்டில், சில நாட்களுக்கு முன் நடிகை சபர்னாவின் உடல் அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்தது.

நிர்வாணமாக அவரது உடல் கிடந்ததால். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் சபர்ணாவுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தது தெரியவந்தது. திருமணமாகி ஒரு குழந்தை உள்ள அவர், இருவரையும் பிரி்ந்து சென்னையில் வாழ்வதும் தெரியவந்தது.

நடிகை சபர்ணா
நடிகை சபர்ணா

ஆகவே குடும்ப பிரச்சினை காரணமாகவோ, நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவோ அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

ஆனால் தொடர் விசாரணையில், அவர் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகி உள்ளது.

இது குறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

சபர்ணா இருந்த குடியிருப்பு கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களை நடமாட்டம் இல்லை. ஆகவே கொலைக்கான வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்தோம்.

தொடர் விசாரணையில், அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததும், அதனால் மன அழுத்தத்தில் இருந்ததும் தெரியவந்தது. இரண்டு மாதமாக வாடகை கூட தரமுடியாமல் தவித்து வந்திருக்கிறார்.

இதற்கிடையில் அவர் காதலித்த நபர், விலகிச் சென்றுவிட்டார்.

சம்பவத்தன்று குளிக்க சென்ற  சபர்ணா,  வாட்டர் ஹீட்டரை ஆன் செய்திருக்கிறார். அந்த நேரம் ஏற்பட்ட  டிப்ரஷனால்…தனது கை நரம்பை தானே அறுத்துக்கொண்டு இருக்கிறார்.

பின்னர் சுதாரித்த சபர்னா, உடனே ஆம்புலன்சுக்கு  போன் செய்து..கையை அறுத்துக்கொண்டேன் … ரத்தம் பீறிடுகிறது…. ஏன் போனை எடுக்கவில்லை ” என்று திட்டி இருக்கிறார்.

ஆகவே , அவர் தற்கொலை செய்துகொண்டார்  என்று உறுதிப்படுத்திக்கொண்டோம்” என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம், உயிருக்குப்போராடும் நேரத்தில் சபர்ணா ஆம்புலன்ஸை அழைத்தும்  வராதது குறித்தும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அவர் கூப்பிட்டதும் ஆம்புலன்சு வந்திருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.