நடிகை சரண்யா தந்தை மற்றும் இயக்குனருமான ராஜ் காலமானார்..

மிழில் ஹீரோயினாக அறிமுகமாகி கமல் ஹாசன், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து இன்று தனுஷ், உதயநிதி, விஜய்சேதுபதி, விமல் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு அம்மா வாக நடித்து வருபவர் சரண்யா பொன் வண்ணன்.


சரண்யாவின் தந்தை ஏ.பி.ராஜ் (வயது 91). இவர் வயது மூப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். ஏபிராஜ் மலையா ளத்தில் கண்ணூர் டீலக்ஸ், டேஞ்சர் பிஸ்கட், லாட்டரி டிக்கெட் என 65 மலை யாள படங்களும், தமிழில் துள்ளி ஓடும் புள்ளிமான், கை நிறைய காசு மற்றும் 6 சிங்கள படங்களையும் இயக்கி இருக்கி உள்ளார். மலையாள படம் ஒன்றிற்காக தேசிய விருதும் வென்றார்.
ஆண்டனி பாஸ்கர் ராஜ் என்கிற ஏபிராஜ் 1929ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். 1951 முதல் 1986 வரை இயக்குனராக இருந்து பல ஹிட் படங்களை அளித்தார்.
ஏபி ராஜ் மறைவுக்கு மலையாள மற்றும் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.