வேற வேலை இல்லையா?:  நெட்டிசன்களை வறுத்தெடுத்த நடிகை கணவர்

 

குழந்தையுடன் சரண்யா

நடிகை சரண்யா மோகனை   கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு  அவரது கணவர் அரவிந்த் கிருஷ்ணன் கடுமையாக பதில் அளித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர் நடிகை சரண்யா மோகனின் குண்டான புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. உடனே நெட்டிசன்கள் ‘எப்படி இருந்த சரண்யா  இப்படி ஆயிட்டாரு” ‘ என்று கிண்டலுடன் பதிவிட ஆரம்பித்தனர்.

இதனால் டென்ஷன் ஆன சரண்யா, “குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடலில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான். இதைப் புரிந்துகொள்ளாதவர்களை என்ன செய்வது” என்று பதிவிட்டிருந்தார்.

கணவருடன் சரண்யா

இந்த நிலையில் இன்று சரண்யாவின் கணவர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன், தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

‘நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த நிலையில், சரண்யா உடல் பருமனானது  முக்கியமான பிரச்சனை இல்லை. மேலும் என் மனைவி திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. அதை நான் பாராட்டுகிறேன். அவர் தாயான பிறகு  பருமன் ஆனதை கிண்டல் செய்பவர்களுக்கு நல்ல எண்ணம் இல்லை’’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

.

You may have missed