போலீஸ் உதவியை கேட்டும் நடிகை.. கிண்டல் செய்யும் நபரை தண்டிக்க கோரி..

மீபத்தில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்ததில் தூக்குபோட்டு தற்கொலைசெய்துகொண்டார். இந்நிலையில் போஜ்புரி நடிகை ராணி சட்டர்ஜி என்பவர் மும்பை போலீ ஸுக்கு இன்ஸ்டாகிராமில் உதவி கேட்டு புகார் அனுப்பி உள்ளார்.

தனஞ்ஜெய் சிங் என்ற நபர் எனது இணைய தள பக்கத்தில் தினமும் எனது தோற்றம், வயது, மதம் போன்றவற்றை கிண்டல் செய்து பதிவுகள் இட்டு வருகிறார். அதை தவிர்த்துப் பார்த்தும் மேலும் பலர் என்னை இகழ்கிறார்கள். இதனால் மன அழுத்தத்தில் இருக்கிறேன். உடனே எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறார். அவரது புகாரை பார்த்து ஷாக் ஆன சக நடிகர்கள் நடிகைக்கு ஆதரவும் தைரியமும் சொல்லி வருகின்றனர்.