மீராவுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகை.. போதும் இத்தோட நிறுத்திக்கொள்..

டிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குறித்து நடிகை மீராமிதுன் சமீபத்தில் விமர்சித்து வீடியோ வெளியிட்டார். ’எனக்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள்தான் காரணம்’ என குறிப்பிட்டிருந்தார், விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை திட்டித் தீர்த்தனர். தற்போது நடிகை சனம் ஷெட்டி, மீராவுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார்,


அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறும்போது,’எஸ்ஏ சந்திரசேகர் முயற்சியால் விஜய் சினிமாவுக்கு வந்து இருக்கலாம். ஆனால் அவர் சினிமா வில் ஜெயிக்க பட்ட கஷ்டங்கள் அனைவருக்கும் தெரியும். ஒரு வெற்றியை சினிமாவில் பெறுவதற்கு கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆகிவிட்டது
விஜய்க்கு இன்று கிடைத்திருக்கும் புகழ் பணத்தால் வாங்க முடியாதது. அவர் மாதிரி உயர்ந்த இடத்தில் உள்ள ஒரு நடிகரை பற்றி பேசுவதற்கு முன்பு ஆயிரம் தடவை யோசிக்க வேண்டும் . நீங்கள் செய்யும் விமர்சனத்திற்கு விஜய் அவர்கள் இருக்கும் உயரத்திற்கு கண்டிப் பாக பதில் அளிக்க மாட்டார்.
உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை. உங்களுக்கு பதில் சொல்ல நானே போதும். இனிமேல் தயவு செய்து சைபர் புல்லிங், பெண்ணுக்கு அராஜகம் போன்ற கருத்துக் களை கூறி காமெடி செய்ய வேண்டாம்’ என தெரிவித்திருக்கிறார் சனம் ஷெட்டி.