தொழிலதிபரை மணந்தார் நடிகை ஷீலா….!

பூவே உனக்காக, கோல்மால், மாயா, நந்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷீலா.

கடந்த 2 வருடங்களாக சினிமா வாய்ப்பு இன்றி இருந்தவர், இப்போது ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

தற்போது தனது திருமண போட்டோக்களை டுவிட்ரில் வெளியிட்டுள்ள ஷீலா “எனக்கு இந்த நாள் சிறப்பான நாள். எதனுடனும் ஒப்பிட முடியாத மகிழ்ச்சியை என் இதயம் உணர்கிறது. புதிய நாளில் புதிய வாழ்க்கையை தொடங்கியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.