ராயல் என்பீல்டிலிருந்து விழுந்த ஷரத்தா..

நேர்கொண்ட பார்வை பட ஹீரோயின் ஷரத்த ஸ்ரீநாத். இவர் கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா என்றதெலுங்கு படத்திற்காக ராயல் என்பீல்டு பைக் ஓட்டி விழுந்த அனுபவம் பற்றி பகிர்ந்தார்.
இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் கூறும்போது.’உங்களிடம் குறைந்தது ஒரு பைக் சவாரி ஷாட் இல்லையென்றால், நீங்கள் ஒரு இந்திய படத்தில் தைரியமான பெண் கதாபாத்திரமா?


கடந்த ஜூன் 2017. பெங்களூர் நந்தி ஹில்ஸில் படப்பிடிப்பு நடத்தி வந்தோம். மேகமூட்டமான நாள், சாலைகள் ஈரமாக இருந்தன. ராயல்பைக் ஒட்டும் காட்சியில் நடிக்க வேண்டும் என்னிடம் வந்து பைக் ஓட்டத் தெரியுமா என்று கேட்கிறார்கள். “இல்லை” என்றேன் ஆனாலும் கற்றுக்கொண்டு நடிக்கிறேன் என்றேன்/ கியர் ஷிப்ட் எவ்வாறு இயங்குகிறது என்று அறிந்தேன்.
எனக்கு 8 வயதாக இருந்தபோது நான் கற்றுக்கொண்ட ஒரு இரு சக்கர வாகனத்தை சமநிலைப்படுத்தும் செயல் மனதில் கொண்டு பைக் ஓட்ட ஆயுதமானேன். ஒரு ருவுண்டு சென்றுவர பைக்கை வெளியே எடுத்தேன். நான் பைக் ஓட்டுவது இதுவே முதல் முறை, அது மிகவும் கடினம் என்று நான் நினைக்க வில்லை. மெதுவாக வண்டியை ஸ்டா செய்து திருப்பினேன் அடுத்த நொடியில் பைக்கோடு சாய்ந்தேன்.
நான் விழுந்தபோது எல்லோரும் எனக்கு உதவ விரைந்தனர், அதேசமயம் பைக்கில் கீறல் விழுந்திருக்குமோ என்று எல்லோரும் கவலைப்பட்டனர்.
இவ்வாறு ஷ்ரத்தா கூறினார்.