வக்கீலான சூர்யா, ஜோதிகா திரைக் குழந்தை..

குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் தற்போது ஹீரோ, ஹீரோயினகளாக என மாறி விட்டனர். சூர்யா, ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. அவர் தற்போது வளர்ந்து வழக்கறிஞர் படிப்பை முடித்து வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்கிறார். ஆனாலும் சினிமா ஆசை அவரை தொடர் கிறது.


தனது இணைய தள பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக படங் களை பகிர்ந்து வருகிறார். விரைவில் அவர் ஹீரோயினாகும் வாய்ப்பு வரும் என ஆவலாக உள்ளார்.