Random image

பாலியல் புகார் நடிகை ஸ்ரீரெட்டி, இயக்குனர் முருகதாஸ் மீது புகார்!

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.  சமீபத்தில் திரைத்துறையில் பலர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி அவர்களுடன் இருக்கும் படங்களையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.  ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் வெளியான இத்தகவல்கள்   தெலுங்கு திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்தன.

இதற்கிடையே, தெலுங்கு நடிகர்கள் சங்கம், சங்கத்தில் இருந்து ஸ்ரீரெட்டியை நீக்கியது. இதையும் ஸ்ரீரெட்டி விமர்சித்தார்.

தவிர, பொது இடத்தில் அரைநிர்வாண போராட்டம் நடத்தி அதிரவைத்தார்.

 

 

பிறகு சில நாட்கள் அமைதியாக இருந்த  ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் முருகதாஸ் பற்றிய சர்ச்சை பதிவொன்றை தனது முகநூல்  பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

அதில் அவர், “ஹாய் தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி… எப்படி இருக்கீங்க? க்ரீன் பார்க் ஹோட்டல் நியாபகமிருக்கா? வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலமாக நாம் சந்தித்தோம். அப்போது எனக்கு ஒரு கதாபாத்திரம் தருவதாக சத்தியம் செய்தீர்கள். ஆனால் நாம் நிறைய… இதுவரை நீங்கள் அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை. நீங்களும் ஒரு சிறந்த மனிதர் தான்” என ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.

இது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த பதிவு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இதுவரை தெலுங்கில் 2 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ஸ்ரீரெட்டியால் சர்ச்சைசியில் சிக்கியுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் பதிவு குறித்து இதுவரை முருகதாஸ் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.