நடிகை ஸ்ரீதேவி குழந்தையின் 4வது பிறந்த தினம் குதுகலம்..

பிரியமான தோழி,தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீதேவி விஜயகுமார். கடந்த 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை மணந்தார். 2016 ஆண்டு ஸ்ரீதேவிக்கு குழந்தை பிறந்தது. ரூபிகா என பெயரிட்டார்.

 

சில தினங்களுக்கு முன் ரூபிகாவின் 4வது பிறந்த தினத்தை கொண்டா டினார். அந்த படங்களை நெட்டில் பகிர்ந்தார். 4 வயதில் குழந்தை இருந்தாலும் இன்னும் தனது அழகையும் இளமையையும் பராமரித்து வருகிறார் ஸ்ரீதேவி.

திருமணத்துக்கு பிறகு ஸ்ரீதேவி நடிப்புக்கு முழுக்குபோடுவிட்டு குடும்ப தலைவியாகி விட்டார்.