நடிகை சுஜா வருணி தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சுஜா வருணியும் சிங்கக் குட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ்வும் 11 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருவருக்கும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஜா வருணி.

இது குறித்து சிவாஜி தேவ் ” உன்னால் நான் பெருமைப்படுகிறேன் சுஜாகுட்டி. நான் அப்பாவானது பெருமையாக இருக்கிறது. சிம்பா (சிங்க ராஜா) வைப் போன்ற ஒரு குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்று அவர் தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.