மாண்டியாவில் நடிகை சுமலதா போட்டியிடுவது உறுதி.. நடிகர்கள் ஆதரவு..

ர்நாடக மாநிலம் மாண்டியா மக்களவை தொகுதியில் நடிகை சுமலதா போட்டியிடுவது உறுதி யாகி உள்ளது. அவரது கணவர் அம்பரீஷ் 3 முறை எம்.பி.யாக இருந்த தொகுதி -இது.

அம்பரீஷ் மறைந்த நிலையில்-சுமலதா இந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்று அம்பரீஷ் ரசிகர்கள் சுமலதாவை வலியுறுத்தி வருகிறார்கள்.

‘’காங்கிரஸ் ஆதரித்தால் போட்டியிடுவேன்’’ என்று சுமலதா கூறிவந்த சூழலில்-அவரை ஆதரிக்க காங்கிரஸ் மறுத்து விட்டது.எனினும் உள்ளூர் காங்கிரசார் மாண்டியாவில் சுமலதா நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளனர்.

நேற்று அவர் மாண்டியா மாவட்டம் நாகமங்கலா தாலுகாவில் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.தேர்தலில் நிற்பது தொடர்பாக அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்தார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து சுமலதா வரும் 18 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

இதற்கிடையே கர்நாடக நடிகர்கள் சுமலதாவுக்கு ஆதரவாக களம் இறங்க உள்ளனர்.

நடிகர் தர்ஷன்  சுமலதாவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

கே.ஜி.எப் புகழ் ஹீரோவான யாஷ் .சுமலதாவை சந்தித்துபேசியுள்ளார். தேர்தலில் சுமலதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக யாஷ் –உறுதி அளித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சிட்டிங் தொகுதியான   மாண்டியாவில் அந்த கட்சி சார்பாக முதல்-அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகிலும் –பிரபல கன்னட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

—- பாப்பாங்குளம் பாரதி