காதலில் விழுந்தே, வம்சம், காளி, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் சுனைனா. இவர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 ஷோவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் நடிகர் இர்பான் , நடிகைகள் அதுல்யா ரவி, கிரண் ரதோட் , ரம்யா பாண்டியன் , வித்யூ லேகா ராமன் ஆகியோரும் தேர்வாகி இருப்பதாக கூறப் படுகிறது. ஆனால் சுனைனா இதனை மறுத்திருக்கிறார்.


’ரியாலிட்டி ஷோவுக்கு நான் பங்கேற்க சென்றால் நான் நடிக்க உள்ள படங்களை யார் முடிப்பது.? ஒருபோதும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள மாட்டேன். நன்றி’ என தெரிவித்திருக்கிறார் சுனைனா.
இந்த ஆண்டு பிக்பாஸ் 4 ஷோ கோவிட் 19 பாதிப்பால் நடக்காது என்று கூறப் பட்டது. ஆனால் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஷோவை தொடங்க ஆலோசித்து கமலிடம் சம்மதம் வாங்கி இருக்கின்றனர்.