சசிகுமாருக்கு ஜோடியான பிரபல நடிகரின் பேத்தி!

sasikumar

‘வெற்றிவேல், கிடாரி’ படங்களின் வெற்றிக்கு பிறகு சசிகுமார், அறிமுக இயக்குநர் பி.பிரகாஷ் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சசிகுமாரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கும் இதற்கு டர்புகா சிவா இசையமைக்கிறார்.

இதில் கோவை சரளா, சங்கிலி முருகன் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் சசிக்கு ஜோடியாக நடிக்க மறைந்த பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அருள்நிதியின் ‘பிருந்தாவனம்’ படத்திலும், ‘துப்பறிவாளன்’ படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கப்போகும் புதிய படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஏற்கெனவே கமிட்டாயிருப்பது குறிப்பிடத்தக்கது.