கழிப்பிடம் கட்டுமான பணியில் நடிகை த்ரிஷா….வைரலாகும் புகைப்படம்

சென்னை:

கழிப்பிடத்தின் அவசியம் குறித்து நடிகை த்ரிஷா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கழிப்பிட கட்டுமான பணிகளை அவர் மேற்கொண்ட புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கான குழந்தைகள் உரிமைக்கான யுனிசெப் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் நலன் சார்ந்த விஷயங்களில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் கழிப்பிடம் கட்டுவதன் அவசியம் குறித்தும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கழிப்பிடம் கட்டுவதன் அவசியம் குறித்து விளக்கி, கழிப்பிட கட்டுமான பணிகளையும் அவரே மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். இதற்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.